‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நெல்சன் ‘ஜெயிலர் 2’ படத்தில் பிஸியாக இருக்கிறார். இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. ரஜினியுடன் நடிப்பவர்கள் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது. இதனிடையே ஜூனியர் என்டிஆரை இயக்க நெல்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜூனியர் என்டிஆர் மற்றும் நெல்சன் சந்திப்பும் நடந்துள்ளது. இதை ஜூனியர் என்டிஆரின் நெருங்கிய நண்பரும், தயாரிப்பாளருமான நாக வம்சி உறுதி செய்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘வார் 2’ மற்றும் பிரசாந்த் நீல், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் நெல்சன் இணைந்து ஒரு படம் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறினார். பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்துள்ளார்.