பெங்களூர்: தங்கம் கடத்தி வந்த பிரபல நடிகையை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் வாகா படத்தில் நடித்த பிரபல நடிகை ரன்யா ராவ் (32) அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்தபோது, பெங்களூரு விமான நிலையத்தில் அவர் பிடிபட்டுள்ளார்.
அதிக நகைகளை அணிந்திருந்த அவரிடம் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து அவரின் உடமைகளை சோதனை செய்ததில் தங்கக் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.