சென்னை : குட் பேட் அக்லி படத்தில் சிம்ரன் மேம் ஆடிய பாடலுக்கு, நான் ஆடினேன். அந்தப் பாட்டு மீண்டும் வைரலாகி உள்ளது என்று நடிகை பிரியா வாரியார் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு அடர் லவ்’ படத்தில் கண்ணடிக்கும் காட்சி மூலம் பிரபலமான ப்ரியா வாரியர் தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு டான்ஸ் ஆடி மீண்டும் வைரல் ஆகி இருக்கிறார்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றி விழாவில் பேசிய பிரியா, ” எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்ன சொல்வது என்று தெரியவில்லை.
நான் உண்மையில் இதனை எதிர்பார்க்கவில்லை. 2018ல் ‘அடார் லவ்’ படத்தில் வைரலானது போல மீண்டும் வைரல் ஆகிவிட்டாய் என்று என்னிடம் சொல்கிறார்கள்.
கடந்த 2 நாட்களாக எனக்கு பலரும் தொடர்புக்கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். என்னுடைய எதிர்பார்ப்பெல்லாம் இந்த படத்தில் அஜித் சாருடன் நடிக்கலாம், அவருடன் ஒரே ஃப்ரேமில் இருக்கலாம் என்பதாகத்தான் இருந்தது.
ஒரு கிளாசிக் ரெட்ரோ பாடல்…அதுவும் சிம்ரன் மேம் ஆடிய பாடலுக்கு, நான் சரியானப் பங்களிப்பை கொடுப்பேன் என்று இயக்குநர் ஆதிக் நம்பியதற்கு நன்றி. நான் அஜித் சாரின் தீவிர ரசிகராக மாறிவிட்டேன். அவ்வளவு உறுதுணையாக இருந்தார். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.