திருவனந்தபுரம்: ‘புஷ்பா 2’ படம் உலகம் முழுவதும் ரூ.1800 கோடிக்கு மேல் வசூல் செய்தது. ஆனால், மலையாளத்தில் இப்படம் பெரும் தோல்வியைச் சந்தித்தது. இதுகுறித்து விநியோகஸ்தர்கள் பேசினர். சமீபத்தில் ‘புஷ்பா 2’ படத்துக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விநியோகஸ்தர்கள் கேரளாவில் புஷ்பா 2 தோல்வியடைந்தது குறித்து பேசினர்.
கேரளாவில் ‘புஷ்பா 2’ படத்துக்கு முதல் நாளில் நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும், அங்குள்ள முன்னணி நடிகர்களுக்குக் கூட கிடைக்காத வரவேற்பை இந்தப் படம் பெற்றதாகவும் தெரிவித்தனர். இருப்பினும், ‘புஷ்பா 2’ வழக்கமான மலையாளப் பாணி படம் அல்ல. மலையாள சினிமா இப்போது முதிர்ச்சியடைந்து வருகிறது. அந்த படங்களில் லாஜிக்கல் ஓட்டைகள் இருந்தால் ரசிகர்களும் புறக்கணிக்கிறார்கள். ‘புஷ்பா’ முதல் பாகம் தர்க்க ரீதியாக இருந்தது. ‘புஷ்பா 2’ படத்தில் பல லாஜிக்கல் பிழைகள் இருப்பதாகச் சொன்னார்கள். அதனால் கேரளா ரசிகர்களை இப்படம் கவரவில்லை.