மும்பை: பாலிவுட் மூத்த நடிகை ரேகா (70) 1981-ம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படமான ‘உம்ரா ஜான்’ படத்தில் நடித்தார். படம் மீண்டும் வெளியிடப்படவுள்ள நிலையில், மும்பையில் திரைப்பட பிரபலங்களுக்காக ஒரு பிரீமியர் காட்சி நடைபெற்றது. ஆமிர் கான், ஹேமா மாலினி, தபு, அனில் கபூர் மற்றும் பலர் படத்தைப் பார்த்து ரசித்தனர்.
முன்னதாக, சிவப்பு கம்பள வரவேற்பின் போது, பார்வையாளர்களை புன்னகையுடன் வரவேற்று நடனமாடிய ரேகா, அவர்களை இறுக்கமாக கட்டிப்பிடித்தார். திடீரென்று, சிலரை முத்தமிட்டு ஆச்சரியப்படுத்தினார். அனில் கபூரை கட்டிப்பிடித்து, தனது தனித்துவமான அடிகளில் நடனமாடினார், இது ரசிகர்களை கவர்ந்தது.

ஏ.ஆர். ரஹ்மான் வந்ததும், ரேகா அவரை வரவேற்க ஓடி வந்து இறுக்கமாக கட்டிப்பிடித்தார். தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவரது கன்னத்தில் முத்தங்களைப் பொழிந்தார். அவர் அவரது முகத்தைப் பிடித்துத் தடவினார்.
இந்த சைகையால் மகிழ்ச்சியடைந்த ஏ.ஆர். ரஹ்மான், தனது செல்போனில் ஒரு செல்ஃபி எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அந்த புகைப்படங்களும் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.