மொபைல் போன் யுகத்தில் இளைஞர்கள் மட்டுமின்றி சில பெரியவர்களும் பாரத நாட்டின் கலாசாரம், சம்பிரதாயத்தின் அருமையும் பெருமையும் அறியாமல் உள்ளனர் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் லதா ரஜினிகாந்த் நடத்திய “பாரத சேவா” என்ற நிகழ்ச்சியில் ரஜினிகாந்தின் உரை வீடியோ ஒளிபரப்பாகப்பட்டது. அந்த உரையில் அவர், மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்கள் தங்களது பாரம்பரியத்தில் நிம்மதியும் சந்தோஷமும் இல்லையென நினைத்து இந்தியாவை நோக்கி வருகிறார்கள் என்று கூறினார்.

இந்தியாவில் தான் உண்மையான நிம்மதி, சந்தோஷம் கிடைக்கிறது என அவர்கள் உணர்ந்து தியானம், யோகா, இயற்கை வாழ்க்கை போன்ற பாரம்பரிய முறைகளை நாடி வருவதாக அவர் தெரிவித்தார். நமது கலாசாரத்தின் பெருமை மற்றும் பண்பாட்டை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், இதற்கான விழிப்புணர்வை உருவாக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் ரஜினிகாந்த் வலியுறுத்தினார்.