அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனுஷின் 55-வது படத்தை இயக்கவுள்ளார். தற்போது ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் ஹிந்தியில் ‘தேரே இஷ்க் மேய்ன்’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் வேலைகள் முடிந்ததும் ராஜ்குமார் இயக்கும் படத்திற்கான தேதிகளை ஒதுக்குவார்.

இந்நிலையில், தனியார் ஊடகம் ஒன்றில் பங்கேற்ற ராஜ்குமார், ‘தனுஷ் 55’ படம் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ‘தனுஷ் 55’ படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம். நம் அன்றாட வாழ்வில் அங்கம் வகிக்கும் பலரைப் பற்றிய கதை இது.
ஆனால் அப்படிப்பட்டவர்கள் இருப்பதை நாம் உணரவில்லை. ஆனால் அவை அனைத்தும் நமது இயல்பான வாழ்க்கை சீராக இயங்குவதற்கு மிக முக்கியமான காரணம். இப்படிப்பட்ட பலர் நம்மையறியாமல் நம்மிடையே இருக்கிறார்கள். இந்த படம் அவர்களுக்கு ஒரு பிரதிநிதித்துவமாக இருக்கும் என்றார் ராஜ்குமார் பெரியசாமி.