சென்னை: கனகாவை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளாராம் நடிகர் ராமராஜன் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
1990 களில் பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகை கனகா ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன போட்டோ இணையத்தில் வெளியானது.
அதன் பின்னர், நடிகர் ராமராஜன் அவரை நேரில் சென்று சந்தித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கனகா தனது தாயார் நடிகை தேவிகா மரணத்திற்கு பிறகு மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், பழைய நினைவுகளை மறந்துவிட்டதாகவும் உருக்கமாக கூறியுள்ளார். மீண்டு வாருங்கள் கனகா என ரசிகர்கள் ஆறுதல் கூறுகின்றனர்.
,