நடிகர் கமல்ஹாசன் மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார். மேலும் இதில் த்ரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு கமல்ஹாசன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்வதற்காக அங்கு சென்றதாக கூறப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “‘தக் லைஃப்’ ஜூன் 5-ம் தேதி வெளியாகிறது. ‘விக்ரம் 2’ படம் குறித்து அவரிடம் கேட்டபோது, “நான் வித்தியாசமான ஸ்கிரிப்ட் எழுதியுள்ளேன்” என்றார்.