சென்னை: கேரளாவிற்கு ரூ. 20 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நாம் ஒன்றுபட்டு நிற்போம். வயநாட்டில் ஏற்பட்ட சோகமான நிலச்சரிவு சம்பவத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்கங்களுடன் எங்கள் இதயம் இருக்கிறது.
சமூகம் அனுபவிக்கும் சீரழிவுகளும் இழப்புகளும் நெஞ்சைப் பிசைகின்றன. மிகவும் தேவைப்படும் இந்த நேரத்தில், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க ஒன்றிணைவதன் முக்கியத்துவத்தை நாங்கள் நினைவுபடுத்துகிறோம்.
ஒற்றுமையின் அடையாளமாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உடனடி உதவிகளை வழங்கவும், மறுசீரமைப்புச் செயல்பாட்டில் உதவி செய்யவும் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் வழங்குகிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.