மதுரை: மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற கள்ளழகர் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் சென்று கருப்பணசுவாமிக்கு அரிவாள் காணிக்கை செலுத்தினார். பல்வேறு தமிழ் படங்களில் நடித்து, சமீபத்தில் வெளியான ‘அமரன்’ படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன், நேற்று தனது மனைவி ஆர்த்தியுடன் மதுரை கள்ளழகர் கோயிலுக்குச் சென்றார்.
மலையிலுள்ள ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலுக்கும் சென்று பார்வையிட்டார். காவல் தெய்வமான 18-வது கருப்பணசுவாமி சன்னதிக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தார். கருப்பணசுவாமி கோவிலுக்கு அரிவாளை பிரசாதமாக வழங்கினார். பின்னர் அவருக்கு கோயில் நிர்வாகத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்து பிரசாதம் வழங்கினர்.
நடிகர் சிவகார்த்திகேயன் அழகர் கோவிலுக்கு வருகிறார் என்ற தகவலையடுத்து, அவரை தரிசனம் செய்த பக்தர்களும், பொதுமக்களும் அங்கு திரண்டனர். செல்போனில் போட்டி போட்டுக்கொண்டு அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். அப்பன் திருப்பதி போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.
அதிகாலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்ற சிவகார்த்திகேயன் அம்மன், சுவாமி சன்னதியில் தரிசனம் செய்தார். சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற மதுரை அழகர் கோயிலிலும் அவர் தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.