‘சென்னை : மனுசி’ திரைப்படத்திற்கு சென்சார் மறுக்கப்பட்டுள்ளதால் இயக்குனர் வெற்றிமாறன் வழக்கு தொடர்ந்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோபி நயினாரின் ‘மனுசி’ படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அப்படத்தின் தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், படத்தை மீண்டும் தணிக்கை செய்ய CBFC-க்கு உத்தரவிட வேண்டும், மறுஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இப்படம் கம்யூனிச கொள்கைகளை குழப்புவதாக உள்ளதாகக் கூறி சென்சார் சான்று மறுக்கப்பட்டு உள்ளது.