பிரபல பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ்-தள கணக்கு பிப். 13-ம் தேதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. “அதை மீட்டெடுப்பதற்கான எனது முயற்சிகள் பலனளிக்கவில்லை. என்னால் கணக்கில் உள்நுழைய முடியவில்லை, அதனால் அதை நீக்க முடியவில்லை. அந்தக் கணக்கிலிருந்து வரும் எந்த இணைப்பையோ அல்லது தகவலையோ நம்ப வேண்டாம்.

கணக்கு மீட்டெடுக்கப்பட்டால் நான் உங்களுக்குத் தெரிவிப்பேன்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அந்த கணக்கு மீட்கப்பட்டதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “பெப்ரவரியில் ஹேக் செய்யப்பட்ட எனது எக்ஸ்-தள கணக்கு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சரி செய்யப்பட்டது.
மேலும், என்னைப் பற்றிய விசித்திரமான விளம்பரங்களுடன் மிகவும் அபத்தமான தலைப்புகள் மற்றும் ஏஐ-உருவாக்கிய படங்களுடன் கட்டுரைகள் வருகின்றன. ரசிகர்கள் அவற்றைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் அவை மோசடி இணைப்புகளுக்கு வழிவகுக்கும். நான் அந்த விளம்பரங்களை நிறுத்த முயற்சிக்கவில்லை. எக்ஸ்-ரேட்டட் மூலம் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்.”