அஜீத் இப்போது தமிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’, ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார். லைக்காவின் நிதி நெருக்கடியால் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஜூன் 20 அன்று அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கியது.
அங்கு சில அதிரடி காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என தெரிகிறது. முதலில் தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியிருந்தார். ஆனால் அந்த தேதியில் விடாமுயற்சி வெளியாகாது என்பது இப்போது உறுதியாகிவிட்டது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிறுவனம் தான் விடாமுயற்சி படத்தையும் வெளியிடுகிறது. அமரன் ரிலீஸ் தேதி அக்டோபர் 31 என்பதால் அதே நாளில் இன்னொரு பெரிய படத்தை கண்டிப்பாக வெளியிட மாட்டார்கள். அதனால் விடாமுயற்சி ரிலீஸ் டிசம்பருக்கு தள்ளிப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.