ஹைதராபாத்: சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம் தெலுங்கிலும் வெளியாகிறது. அதன் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. விஜய் தேவரகொண்டா இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் தேவரகொண்டாவிடம் கடந்த காலத்திற்குச் சென்று யாரையாவது சந்திக்க விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டது.

இதற்கு அவர், “நான் ஆங்கிலேயர்களைச் சந்திக்க விரும்புகிறேன். நான் அவர்களைச் சந்தித்து இரண்டு அறைகள் தருவேன். அதேபோல், நான் ஔரங்கசீப்புக்கு இரண்டு அல்லது மூன்று அறைகள் தர விரும்புகிறேன். காரணம், நான் ‘சாவா’ என்ற இந்தி படத்தைப் பார்த்தேன். அதனால்தான், எனக்கு ஔரங்கசீப் மீது மிகவும் கோபமாக உள்ளது,” என்று அவர் கூறினார்.
விஜய் தேவரகொண்டா இப்படிப் பேசியபோது சூர்யாவின் முகம் மாறியது. அவர் அதிர்ச்சியடைந்தார். தனது படத்தின் விளம்பரத்தின் போது அரசியல் பற்றி தேவையில்லாமல் பேசியதாலும், அது சில கட்சிகளை தனது படத்திற்கு எதிராகத் திருப்பக்கூடும் என்பதாலும் அவர் வருத்தமடைந்ததாகக் கூறப்படுகிறது.