மும்பை: தீவிர உடற்பயிற்சியில் மிருணாள் தாகூர் இறங்கி உள்ளார். இதற்காக ‘ஜிம்’முக்கு சென்று கடுமையான பயிற்சி சென்று, உடலை கட்டுக்கோப்பாக்கி வருகிறார்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் மிருணாள் தாகூர். ‘தூபான்’, ‘ஹாய் நான்னா’, ‘சீதா ராமம்’, ‘பீப்பா’ உள்பட பல படங்களில் நடித்துள்ள இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் ‘பேமிலி ஸ்டார்’ படம் வெளியானது. ‘கல்கி 2898 ஏ.டி.’ படத்திலும் நடித்திருந்தார்.
தமிழிலும் மிருணாள் தாகூர் படங்கள் நடிக்க திட்டமிட்டுள்ளார். அந்தவகையில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக அவர் புதிய படங்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது தெலுங்கு, இந்தியில் பிசியாக நடித்து வரும் மிருணாள் தாகூர், இந்தியில் அதிரடி ஆக்ஷன் படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்காக ‘ஜிம்’முக்கு சென்று கடுமையான பயிற்சி சென்று, உடலை கட்டுக்கோப்பாக்கி வருகிறார்.
இதற்காக கடுமையான ‘டயட்’டிலும் இருக்கிறாராம். திரவ உணவுகளையே பெரும்பாலும் உட்கொள்கிறாராம். சமீபத்தில், ‘தன்னிடம் திறமை இருக்கும்போதும், பாலிவுட் சினிமா தன்னை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை’ என மிருணாள் தாகூர் வேதனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.