சென்னை: நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி குறித்து படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ‘ஜன நாயகன்’ தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்நிலையில், ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் நாளை 3 ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அரசியலில் இறங்கியுள்ளதால் நடிகர் விஜய்யின் கடைசி படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.