‘தி இன்டர்ன்’ என்பது ராபர்ட் டி நிரோ, ஆனி ஹாத்வே, ரென் ருஸ்ஸோ, லிண்டா லாவின் மற்றும் பலர் நடித்த ஒரு ஹாலிவுட் படம். இந்த நகைச்சுவைத் திரைப்படத்தை நான்சி மேயர்ஸ் இயக்கியுள்ளார்.
2015-ல் வெளியாகி பெரும் கவனத்தைப் பெற்ற இந்தப் படம், இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப் படம் 70 வயது முதியவருக்கும் ஒரு இளம் பெண் அதிகாரிக்கும் இடையே பணியிடத்தில் ஏற்படும் சாத்தியமற்ற நட்பைப் பற்றிப் பேசுகிறது.

இந்தப் படத்தை தீபிகா படுகோனே தயாரித்து நடிப்பார் என்றும், அமிதாப் பச்சன் 70 வயது முதியவராக நடிப்பார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், தீபிகா படுகோனே இந்தப் படத்தில் நடிப்பதைத் தவிர்த்துவிட்டார்.
இந்தப் படத்தின் தயாரிப்பில் மட்டுமே அவர் கவனம் செலுத்துவார்.