சென்னை : கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத சந்தோஷம் பயணம் பண்ணும் போதும் கிடைக்கும் என்று ஆசை சீரியல் கதாநாயகி கோமதி பிரியா பதிவிட்டுள்ளார்.
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் கோமதி பிரியா. மீனா கதாபாத்திரத்திற்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
கோமதி பிரியா இன்ஸ்டாவில் அதிகம் ஆக்டிவாக இருப்பவர். அவரது லேட்டஸ்ட் போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
கோமதி பிரியா தற்போது கர்நாடகாவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு ஜீப் மீது அமர்ந்து அவர் பயணித்து மலையை ரசித்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
“கோடிரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத சந்தோஷம் பயணம் பண்ணும் போதும் கிடைக்கும்” என அவர் பதிவிட்டு இருக்கிறார்.