கேரளா: மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்மூட்டி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. படத்திற்கு களம் காவல் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் மம்மூட்டி கடைசியாக கௌதம் மேனன் இயக்கத்தில் டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த அளவில் வெற்றிபெறவில்லை.
இதனைத் தொடர்ந்து மம்மூட்டி, கௌதம் மேனன் இணைந்து நடித்துள்ள புதிய படமான ‘பசூகா’ வருகிற ஏப்ரல் 10 அன்று வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், மம்மூட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘மம்மூட்டி கம்பெனி’ தயாரிப்பில் அவர் நடிக்கும் மற்றொரு படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
இந்தப் படத்திற்கு ‘களம்காவல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மம்மூட்டியுடன் இணைந்து விநாயகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜிதின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இதுவரை பார்த்திராத மம்மூட்டியைக் காணத் தயாராக இருங்கள் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.