சென்னை: லப்பர் பந்து திரைப்பட இயக்குநருக்கு தங்க செயினை அதில் நடித்த ஹரிஷ் கல்யாண் பரிசளித்துள்ளார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையை கொண்டிருந்தது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவாசிகா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லப்பர் பந்தை பார்த்த ரசிகர்கள் பலர், சமூக வலைதளங்களில் இந்தப் படத்திற்கு பாராட்டு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், லப்பர் பந்து படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் தங்க சங்கிலியை பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.