சென்னை: விடாமுயற்சி கதை என்னுடையது இல்லை. நான் அஜித் சார் நடிப்பில் பண்ண நினைச்சது, ஒரு ஆக்ஷன் த்ரில்லர். இந்தப் படத்தோட கதையை அஜித் சார்தான் சொன்னார் என்று இயக்குனர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “விடாமுயற்சி.” இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆக்ஷன் காட்சிகள், படத்தின் ஒளிப்பதிவு, டிரெய்லரின் தரத்தை உயர்த்தியுள்ளது.
படத்தின் பாடல்களான சவதீகா மற்றும் பத்திகிச்சு பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தை குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார் இயக்குனர் மகிழ் திருமேனி.
“விடாமுயற்சி கதை என்னுடையது இல்லை. நான் அஜித் சார் நடிப்பில் பண்ண நினைச்சது, ஒரு ஆக்ஷன் த்ரில்லர். இந்தப் படத்தோட கதையை அஜித் சார்தான் சொன்னார். அவரோட இமேஜுக்கும் இந்தப் படத்துல அவர் பண்ணியிருக்கிற கேரக்டருக்கும் தொடர்பே இல்லை. இது ஒரு மாஸ் என்டர்டெயினர் படம் இல்லை. ரசிகர்கள் அதை எதிர்பார்த்து வரவேண்டாம். அஜித் சார் இப்படி படம் பண்ணணும்னு ஆசைப்பட்டார்” என்று அவர் கூறியுள்ளார்.