பிரபல இந்தி இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயண கதை திரைப்படமாக உருவாகிறது. இரண்டு பாகங்களாக உருவாகும் இதில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். யாஷ் ராவணனாக நடிக்கிறார். ஹனுமானாக சன்னி தியோலும், சூர்பணகையாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இதற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்நிலையில் யாஷ் ராவணனாக நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக நடிகர் யாஷ் நேற்று உஜ்ஜயினியில் உள்ள மஹாகாலேஷ்வர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வழிபாட்டிற்குப் பிறகு அவர் அளித்த பேட்டியில், “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக இந்த கோவிலுக்கு வந்தேன். நான் ஒரு தீவிர சிவ பக்தன். அனைவரின் மகிழ்ச்சி மற்றும் நலனுக்காக நான் பிரார்த்தனை செய்தேன்” என்று கூறினார்.