சென்னை: காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் இன்று நடைபெற இருந்த இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள ஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில், இன்று “Vijay Antony 3.0 -இன்னிசை கச்சேரி” நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டது. விஜய் ஆண்டனியின் ரசிகர்கள் ஏராளமானோர் இசை கச்சேரியில் பங்கேற்க ஆவலுடன் இருந்தனர்.
இந்நிலையில், காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் இன்று நடைபெற இருந்த இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மற்றொரு நாளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேதி விபரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
இதுதொடர்பாக விஜய் ஆண்டனி வருத்தம் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ” சில எதிர்பாராத காரணங்களாலும், மற்றும் தற்போது சென்னையில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டும், அரசு அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், இன்று நடைபெறவிருந்த விஜய் ஆண்டனி 3.0 Live Concert, வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இதனால் உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மிகவும் வருத்தப்படுகிறேன். புதிய நிகழ்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் புரிதலுக்கு நன்றி” என குறிப்பிட்டிருந்தார்.