சென்னை: விடுதலை2 படத்தில் 8 நிமிடத்தை குறைத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்தனர். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர்.
சூரியின் திரைப்பயணத்தில் இப்படம் திருப்பு முனையாக அமைந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது.
விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதிலும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் 8 நிமிடத்தை குறைத்துள்ளனர். இதனை படக்குழு ஒரு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.
அதில் இயக்குனர் வெற்றிமாறன் ‘ இந்த திரைப்படத்தின் பணி நிறைவடைந்தது. படத்தின் நீள அளவை 8 நிமிடம் குறைத்துள்ளோம். இந்த படத்தை இயக்கியதில் நாங்கள் அனைவரும் நிறைய கற்றுக்கொண்டோம். இத்திரைப்படத்தில் நிறைய நபர்கள் அவர்களின் உழைப்பை கொடுத்துள்ளனர். அவர்களின் உழைப்பினால் தான் இப்படம் சாத்தியமானது அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
இந்த படம் எப்படி இருக்குன்னு பார்வையாளர்களான நீங்கதான் சொல்லனும். அனுபவமா இந்த படம் எங்களுக்கு நிறைய கத்து கொடுத்துருக்கு அத விட அதிகமா கடின உழைப்ப போட்டிருக்கோம். நன்றி ” என கூறியுள்ளார்.