சென்னை : நடிகர் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி’ பட ‘சவதீகா’ பாடலின் ரீலோடட் வெர்ஷனுக்கு வரவேற்பு அதிகம் கிடைத்துள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. அனிருத் இசையமைத்துள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்.6ம் தேதி வெளியாகிறது.
இதில் இடம்பெற்றுள்ள ‘சவதீகா… ‘ பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்பாடலின் ரீலோடட் வெர்ஷனை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
மேலும் அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்த பாடல் வைரலாக பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.