சென்னை: வந்தே பாரத் ரயிலில் ொடுக்கப்படும் உணவு குறித்து நடிகர் பார்த்திபனின் பதிவு வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் மிக முக்கியமான நபர் பார்த்திபன். இவர் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் வெளியான டீன்ஸ் திரைப்படத்தை இயக்கி நடித்து இருந்தார்.
தற்பொழுது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். சினிமா மட்டுமின்றி சமூகத்தில் நடக்கும் அநீதிக்கும் குரல் கொடுக்கும் நடிகர் பார்த்திபன். ஒரு பதிவை தற்பொழுது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் “முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது.சார் அதை comment செய்ததால் உடனே இப்பதிவு. ‘வந்தே பாரத்’-தில் தந்தே உணவு தரமாக இல்லை. பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்ய கேடென சுற்றத்தார் முணுமுணுத்தார்கள். நான் complaint book-ஐ வாங்கி கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன்.
நானதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன் பெறுதல் முக்கியமென…” என பதிவிட்டுள்ளார். இந்த வைரல் தற்போது இணையத்தில் வெகு வேகமாக வைரலாகி வருகிறது. வந்தே பாரத் ரயிலில் அளிக்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளது என்று ஏற்கனவே பலர் குற்றம் சாட்டி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.