சென்னை : கணவருடன் இணைந்து புகைப்படங்கள் வெளியிடாதது ஏன் என்பது குறித்து வெளிப்படையாக நடிகை பாவனா தெரிவித்துள்ளார்.
மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் பக்கம் வந்தவர் வெயில், கூடல் நகர், தீபாவளி, ராமேஸ்வரம், ஆர்யா, கிழக்கு கடற்கரை சாலை என தொடர்ந்து நடித்து வந்தார்.
பின் அவருக்கு கிடைத்த பெரிய நடிகரின் படம் தான் அஜித்தின் அசல். பெரிய எதிர்ப்பார்ப்போடு பாவனா நடித்தாலும் அப்படம் படு தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு மீண்டும் மலையாள சினிமா பக்கம் சென்றவர் படங்கள் நடித்து வந்தார்.
நடிகை பாவனாவிற்கு 2018ம் ஆண்டு நவீன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இன்ஸ்டாவில் படு ஆக்டீவாக இருக்கும் பாவனா தனது கணவருடன் எடுக்கும் புகைப்படங்களை அவ்வளவாக பதிவிட்டது கிடையாது, இதனால் இருவருக்கும் ஏதோ பிரச்சனை என்றெல்லாம் பேச்ச எழுந்தது.
இதுகுறித்து அண்மையில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார் பாவனா, அதில் அவர், நானும் என் கணவரும் தினமும் ஜோடியா போட்டோ போட்டுட்டு இருக்க மாட்டோம், அப்படி போட்டா Cringeஆ இருக்கும்.
அதையும் மீறி போட்டோ போட்டா இது பழைய போட்டோ, இருவரும் பிரிந்தார்கள் என்பார்கள்.
இப்போதைக்கு நானும் என் புருஷனும் நன்றாக உள்ளோம், அப்படி ஏதாவது பிரச்சனை வந்தால் நானே கூறுகிறேன் என கூலாக பேசியுள்ளார்.