பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என யோகி பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘பேபி & பேபி’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் முக்கிய வேடத்தில் நடிக்கும் யோகி பாபுவும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போது, நிருபர்கள் யோகி பாபுவிடம் அஜித் குறித்து கேட்டனர்.
“அஜித்துக்கு பத்ம பூஷன் விருது கிடைத்தது குறித்து” என்ற கேள்விக்கு, “அவர் எவ்வளவு பெரிய சாதனை செய்துள்ளார். அது பெரிய விஷயம். அவரை நாம் வாழ்த்த வேண்டும். அனைவரும் சேர்ந்து கொண்டாட வேண்டும். அனைவரும் அவரைப் பற்றி பெருமையாக பேச வேண்டும்” என்று பதிலளித்தார் யோகி பாபு.
அந்த பாராட்டு விழாவில்.” பிரதாப் இயக்கத்தில் ஜெய், சத்யராஜ், யோகி பாபு, கீர்த்தனா, சாய் தன்யா, பிரக்யா நாக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘பேபி & பேபி’. இமான் இசையமைத்துள்ள இப்படத்தை யுவராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.