சியா விதை தண்ணீர் (Chia Seed Water) பிரபலமாக இருப்பது நம்மில் பலருக்கும் தெரிந்ததே, ஆனால் சமீப நாட்களாக ஓக்ரா (வெண்டை) சியா சீட் வாட்டர் உடல்நல ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. உண்மையில் வெண்டை மற்றும் சியா விதைகளுடனான இந்த இன்ஃப்யூஸ்ட் வாட்டரை பருகுவது வழக்கத்திற்கு மாறானதாக தோன்றினாலும். இதை குடிப்பதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இந்த சத்தான பானத்தை உங்கள் டயட்டில் சேர்க்க காரணங்கள் இங்கே…
ஊட்ட சத்துக்கள் நிறைந்த பானம்:
வெண்டைக்காயில் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற மினரல்ஸ், ஃபிளாவனாய்ட்ஸ் மற்றும் பாலிபினால்ஸ் போன்ற ஆன்டிஆக்ஸிடனட்ஸ் நிரம்பியுள்ளன. மறுபுறம், சியா விதைகளில் ஃபைபர் சத்து, புரோட்டின், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
ஹைட்ரேஷன் பூஸ்ட்டாக செயல்படும்:
வெண்டை விதை மற்றும் சியா விதை இரண்டுமே சிறந்த ஹைட்ரேட்டிங் ஏஜென்ட்ஸ் ஆகும். சியா விதைகள் தண்ணீரை உறிஞ்சி, எலக்ட்ரோலைட்டுகளைத் தக்கவைக்க உதவுகின்றன, அதே நேரம் வெண்டையில் ஹைட்ரேஷன் மற்றும் செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும் mucilage உள்ளது.
செரிமான ஆரோக்கியம்:
வெண்டை மற்றும் சியா விதைகளின் கலவையான இந்த பானம் அதிக நார்ச்சத்து கொண்டிருப்பதன் காரணமாக செரிமான ஆரோக்கியத்தை ஒழுங்குபடுத்துகிறது. மேலும் மலச்சிக்கலை போக்கவும், குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை ஆதரிக்கவும், ஒட்டுமொத்த செரிமான செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும்.
தகுந்த உடல் எடை மேலாண்மைக்கு…
சியா விதைகள் வயிற்று நிரம்ப சாப்பிட்ட திருப்தியை ஊக்குவிக்கும் மற்றும் பசியை கட்டுப்படுத்தும் திறனுக்காக அறியப்படுகின்றன, இது உடல் எடை மேலாண்மைக்கு உதவும். இதோடு சேர்த்து குறைந்த கலோரி கொண்ட வெண்டையும் இந்த பானத்தில் சேர்ந்திருப்பது ஒரு சீரான டயட்டிற்கானதாக இருக்கும். இதய ஆரோக்கியம்:
வெண்டையில் சொல்யூபிள் ஃபைபர் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது கொலஸ்ட்ரால் லெவலை குறைக்க உதவுகிறது. அதே நேரம் சியா விதைகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இவை அழற்சி மற்றும் வீக்கத்தை குறைப்பதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கின்றன மற்றும் பிளட் லிப்பிட் ப்ரொஃபைல்ஸை மேம்படுத்துகின்றன. ரத்த சர்க்கரை கட்டுப்படுத்துகிறது:
வெண்டை மற்றும் சியா விதைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து செரிமானம் மற்றும் சர்க்கரை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது, இது உகந்த ரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் அல்லது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைங்க நினைப்பவர்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும் பானம் ஆகும். அழற்சி எதிர்ப்பு பண்புகள்:
வெண்டை மற்றும் சியா விதைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் காரணமாக இவை அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. இந்த பானத்தை அடிக்கடி எடுத்து கொள்வது உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகிறது, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்கிறது.
தயாரிப்பது எளிது…
ஓக்ரா மற்றும் சியா விதை பானம் செய்வது எளிது. தேவையான அளவு ஃபிரெஷ்ஷான வெண்டையை எடுத்து சிறிய சிறிய பீஸ்களாக கட் செய்து கொண்டு ஸ்மூத்தாகும் வரை 2 கப் தண்ணீரில் நன்கு கலக்கவும்.
பின்னர் இதோடு நீங்கள் 1 டேபிள் ஸ்பூன் சியா விதைகளை சேர்த்து கலக்கவும்.
பின் விதை ஜெல் போல மாறும் வரை சில நிமிடங்கள் காத்திருக்கவும். சியா விதைகள் வீங்கி ஜெல் போல ஆக குறைந்தது 15-20 நிமிடங்கள் ஆகும்.
இந்த பானத்தில் சுவைக்காக எலுமிச்சை சாறு அல்லது தேன் சேர்க்கலாம்.