தேவையான பொருட்கள் :
வெண்ணெய், மிளகு – 2 தேக்கரண்டி
கிராம்பு உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
இஞ்சி – சிறிய துண்டு
கறுப்பு உளுந்து – 1 கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை : கறுப்பு உளுந்து நல்ல வாசனை வரும் வரை வெறும் கடாயில் வறுக்கவும். பிறகு மிக்ஸியில் ரவை போல் கரகரப்பான பொடியாக அரைக்கவும். கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, மிளகுத் தூள், வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசையவும். அதன் பிறகு 15 நிமிடம் ஊறவைத்து வடை போல் செய்து சூடான எண்ணெய் விட்டு கடாயில் போடவும். இந்த கறுப்பு உளுந்து வடை பைரவருக்கு செய்யப்படும் சிறப்பு பிரசாதமாகும். இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்காக செய்யலாம்.