சென்னை: அருமையான ருசியில் அசோகா அல்வா செய்து பாருங்கள். இதோ செய்முறை.
தேவையான பொருட்கள்:
பயற்றம் பருப்பு – 1 கப்
சர்க்கரை – 3 கப்
கோதுமைமாவு – 1/4 கப்
நெய் – 2 கப்
முந்திரி கொஞ்சம்
கேசரி பவுடர் கொஞ்சம்
செய்முறை: பயற்றம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, குக்கரில் நன்கு குழையும் வண்ணம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பை வறுக்கவும். சிறிது எண்ணெய்யில் கோதுமை மாவை சிவக்க வாசனை வரும் வரை வறுக்கவும். கோதுமையுடன் வேக வைத்த பருப்பு, சக்கரை, கேசரி பவுடர் சிறிதளவு, சேர்த்து கிளறவும்.
நன்கு சுருண்டு வந்தவுடன் அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறலாம்.