தேவையான பொருட்கள்
3- சக்கரைவள்ளி கிழங்கு
1 கப் கெட்டியான தேங்காய் பால், 1 கப் இரண்டாவது பால்
3/4 கப் வெல்லம்
1 ஸ்பூன் தேங்காய் துருவல் நெய்யில் வறுக்கவும்
1 ஸ்பூன் வறுத்த முந்திரி
1/2 ஸ்பூன் ஏலக்காய் தூள்
2 தேக்கரண்டி நெய்

செய்முறை: சக்கரைவள்ளி கிழங்கு நன்கு ஆவியில் வேகவைத்து தோலை உரித்து நன்கு மசிக்கவும். கடாயில் போட்டு 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரி, தேங்காய் துருவலை வறுத்து, பின் மசித்த சக்கரைவள்ளி கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வெந்ததும் வெல்லம் சேர்த்து வதக்கி, இரண்டாம் தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்க விடவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கொதிக்க வைத்து, கெட்டியான தேங்காய்ப் பால் சேர்த்து, ஏலக்காய்த் தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும் (கொதிக்க வேண்டாம்) முந்திரி பருப்பு, நெய்யில் வறுத்த தேங்காய் துருவல் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்… சர்க்கரை கலந்த சக்கரைவள்ளி கிழங்கு பாயாசம் மிகவும் சுவையாக இருக்கும்… உடலுக்கு மிகவும் நல்லது… செய்து பார்த்து சுவைத்து பாருங்கள்…
குறிப்பு – வெல்லம் சுத்தமாக இல்லை என்றால் தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொள்ளவும்.