சென்னை: அட்டகாசமான சுவையில், ஈசியாக கொத்தவரங்காய் சாம்பார் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையானவை- இரண்டாக நறுக்கிய கொத்தவரங்காய் – 1 கைப்பிடி, புளி – நெல்லிக்காயளவு, சாம்பார் பொடி – 3 ஸ்பூன், உப்பு- தே.அ, பருப்பு – 1 கைப்பிடி. தாளிக்க: எண்ணெய்- 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல்- 1, வெந்தயம்- ½ டீஸ்பூன், பெருங்காயம்- 1 சிட்டிகை.
செய்முறை- புளியைத் திட்டமாக தண்ணீர் ஊற்றிக் கரைத்து, உப்பு, காரம் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். துவரம் பருப்பை குழைய வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கொத்தவரையை தனியாக வேகவைக்கவும்.
கொதிக்கும் குழம்பில் வெந்த கொத்தவரங்காயை போட்டு மேலும் 2 கொதி விட்டு பச்சை வாசனை போன பின் வெந்த பருப்பைப் போட்டு மேலும் 2 கொதி விட்டு இறக்கி தாளித்தால் கொத்தவரங்காய் சாம்பார் தயார்.