தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு – 50 கிராம்
பீட்ரூட் – சிறியது
பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லி கறிவேப்பிலை
சீரகம் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை
முதலில் கடலைப் பருப்பை 30 நிமிடம் ஊறவைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின், ஊறவைத்த பருப்பை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் துருவிய பீட்ரூட்டை சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை, பச்சை மிளகாய், சீரகம், தேவையான அளவு உப்பு அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ள வேண்டும். பின்னர் எண்ணெய் ஊற்றி அதில் மாவை சிறுசிறு உருளையாக பிடித்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் மிகவும் சுவையான, ருசியான மொறுமொறுப்பான பீட்ரூட் வடை ரெடி.