தேவையான பொருட்கள்
தயிர் – 2 தேக்கரண்டி
பால் – 1/2 லிட்டர்
சூரியகாந்தி எண்ணெய் – 75 மிலி
நாட்டு சர்க்கரை – 1 கப்
சமையல் சோடா – 1/2 தேக்கரண்டி
பட்டை தூள் – 1 தேக்கரண்டி
கோதுமை மாவு – ஒன்றரை கப்
வெண்ணிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி
உப்பு – 1 சிட்டிகை
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
வெல்லம் – 1/2 தேக்கரண்டி
வால்நட்ஸ் – 1 கைப்பிடி
உலர்ந்த திராட்சை-10
வெண்ணெய் – சிறிது
எலுமிச்சை தோல் – சிறிது
கேரட்-2
செய்முறை: முதலில், ஒரு பாத்திரத்தில், ½ லிட்டர் பால், 2 டேபிள்ஸ்பூன் தயிர், 75 மில்லி சூரியகாந்தி எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் வெனிலா எசன்ஸ், 1 கப் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். 1 ½ கப் கோதுமை மாவு, 1 சிட்டிகை உப்பு, 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர், ½ டீஸ்பூன் பேக்கிங் சோடா, ½ டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது இதை கலந்த கலவையில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும். 1 கைப்பிடி வால்நட் பருப்புகள், 10 உலர்ந்த திராட்சைகள், சிறிது அரைத்த எலுமிச்சை தோல் சேர்க்கவும். இதனுடன் 2 துருவிய கேரட் சேர்த்து நன்கு கலக்கவும். பத்து நிமிடங்களுக்கு அடுப்பை முன்கூட்டியே சூடாக்கவும். கேக் டின்னில் வெண்ணெய் தடவிய பின், கலந்த மாவை சேர்த்து 180 டிகிரி செல்சியஸில் 30 நிமிடம் அடுப்பில் வைத்து பேக் செய்யவும். சுவையான கேரட் கேக் தயார்.