தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் – 4 கப்
சர்க்கரை – 400 கிராம்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
ரோஸ் எசன்ஸ் – 1 டீஸ்பூன்
நெய் – 200 கிராம்
முந்திரி பருப்பு – 2 டீஸ்பூன்.
செய்முறை: முதலில், அடுப்பில் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, அது சூடானதும், தேங்காய் துருவலைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர், அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு, 1/2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். சர்க்கரை கரைந்து கெட்டியாகும்போது, வறுத்த தேங்காய் துருவலைச் சேர்த்து தொடர்ந்து கிளறவும். அது கெட்டியாகத் தொடங்கியதும், நெய்யைச் சேர்த்து கிளறவும். கேக் தயாரானதும், ரோஸ் எசன்ஸை ஊற்றி, நெய் தடவி, தாம்பலில் ஊற்றவும். மேலே பொடித்த முந்திரி மற்றும் ஏலக்காயைத் தூவி அலங்கரிக்கவும். குளிர்ந்த பிறகு, வில்லைகள் சேர்க்கவும். இது ‘தேங்காய் பூ கேக்’. இது மலிவானதும் கூட. செய்வது எளிது. சுவையான கேக்.