சென்னை: மிகவும் ருசியான உணவு வகைகளில் ஒன்றான பருப்பு உருண்டை குழம்பு எப்படி செய்வது தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்: பச்சரிசி – 150 கிராம், பாசிப்பருப்பு – 150 கிராம், துவரம் – 150 கிராம், கடலைப்பருப்பு – 350 கிராம், இஞ்சி – ஒரு துண்டு, சோம்பு – ஒரு ஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு – 3 ஸ்பூன், சின்ன வெங்காயம் – 100 கிராம்
குழம்பு: தக்காளி – 3, சின்ன வெங்காயம் – 150 கிராம், பூண்டு – 5 பல், தேங்காய் துருவல் – 150 கிராம், மல்லித் தழை – தேவையான அளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, வெந்தயம் – சிறிதளவு, நல்லெண்ணெய் – 50 மில்லி, மல்லி பொடி – 1ஸ்பூன், மிளகு தூள் – தேவையான அளவு, புளி – சிறிதளவு
செய்முறை: முதலில் அரிசி, பருப்புகளை கழுவி நன்றாக ஊற வைத்து விடுங்கள். இப்படி 20 நிமிடம் களித்து ஊறிய பின்னர் அவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து சற்று கெட்டியாக அரைத்து கொள்ளுங்கள். அதன்பின் வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அரைத்த மாவு மற்றும் வெங்காயம் அதனுடன் சோம்பு, இஞ்சி, கறிவேப்பிலை, எலுமிச்சம்பழச் சாறு எல்லாவற்றையும் கலந்து பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து விடுங்கள்.
அதன்பின் மற்றொரு கடாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதன் பிறகு தேங்காய் துருவலை அரைத்து எடுத்து வதக்கிய தக்காளியில் சேர்த்து மிளகாயும், மல்லி தூளும் சேர்த்து குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பில் எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைத்த உருண்டையை ஒன்றின் பின் ஒன்றாக போடவும். அதன்பின் கரைத்து வைத்திருக்கும் புளிக்கலவையை சேர்க்கவும். உருண்டைகளை திருப்பி விட்டு மேலும் 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்.