சென்னை: அருமையான சுவையில் வெங்காய பொடி தோசை செய்து இருக்கீங்களா? செய்வோமா?
தேவையானவை: தோசை மாவு – 1 கப் இட்லி தூள் – தேவையான அளவு வெங்காயம் – 1 கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய் – தேவைக்கேற்ப.
செய்முறை: வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தோசை மாவை அதில் ஊற்றி மெல்லிய தோசையாக சுட்டு எடுக்கவும்.
பின் அதன் மேல் வெங்காயம், கொத்தமல்லி, இட்லி பொடி தூவி, மேலே எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் வதக்கவும். பின் தோசையை திருப்பி போட்டு 1 நிமிடம் வேக வைத்துபரிமாறினால் சூப்பரான வெங்காய தூள் தோசை ரெடி!!!
சின்ன வெங்காயம் பொடி தோசை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.