சென்னை: ருசியான ஆனியன் சாதம் செய்து இருக்கிறீர்களா? செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள் :
அரிசி – 1 கிலோவெங்காயம் – 3 (நறுக்கியது)கொத்தமல்லி இலை – 1/4 கப்தனி மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்கரம் மசாலாத் தூள் – 1 டேபிள் ஸ்பூன்உப்பு – தேவையான அளவுஇஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்பச்சைமிளகாய் – 6 எண்ணம்பட்டை – 1 துண்டுகிராம்பு – 5 எண்ணம்எண்ணெய் – தேவையான அளவுநெய் – தேவையான அளவு
செய்முறை: ஆனியன் ரைஸ் செய்வதற்கு முதலில் சாதத்தை வடித்து உதிர் உதிராக இருக்கும்படி கிளறிக் கொள்ளவும். பிறகு பச்சை மிளகாயை நீளவாக்கிலும், வெங்காயத்தை பொடிப்பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் பட்டை, கிராம்பு நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
வதக்கும் போது அதில் கரம் மசாலா தூள், தனி மிளகாய் தூள் போட்டு நன்றாக கிளறவும். கிளறியவுடன் நன்கு மசாலாபொன்னிறமாக வந்ததும், அதில் உப்பு சேர்த்து கிளறவும். பிறகு அதில் வடித்த உதிரியான சாதத்தை போட்டு கிளறவும்.
பிறகு மசாலாவுடன் சாதம் ஒன்றாக சேர்ந்ததும் இறக்கி வைத்து சாதத்தின் மேல் நெய்யை ஊற்றி, கொத்தமல்லி இலைகளைத் தூவி பரிமாறவும். சுவையான வெங்காயம் சாதம் (ஆனியன் ரைஸ்) தயார்.