சென்னை: உளுந்து சாதம் பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இந்த கறுப்பு உளுந்தை வைத்து உளுந்து சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம் !
தேவையான பொருள்கள் –
அரிசி – 1 கப்
தோல் உளுந்து – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
அரைக்க –
தேங்காய் துருவல் – 4 மேஜைக்கரண்டி
பூண்டு பற்கள் – 4
சீரகம் – 1 தேக்கரண்டி
செய்முறை: அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் அரிசி, தோல் உளுந்து இரண்டையும் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், பூண்டு பற்கள், சீரகம் மூன்றையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் அரிசி, தோல் உளுந்து, உப்பு, அரைத்த தேங்காய் கலவை, எல்லாவற்றையும் போட்டு அதோடு 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மூடி போட்டு மூடவும்.
நீராவி வந்ததும் வெயிட் போட்டு 4 விசில் வரும் வரை வைத்திருந்து அடுப்பை அணைக்கவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி விடவும். சுவையான உளுந்து சாதம் ரெடி.
உளுந்து சாதத்துடன் அவியல், தக்காளி பச்சடி, எள்ளுத் துவையல் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.