தேவையானவை :
கடலை மாவு – ஒரு கப்
சர்க்கரை – ஒரு கப்
பால் – 2 கப்
தேங்காய்ப்பால் – அரை கப்
முந்திரி, கிஸ்மிஸ் – தேவைக்கேற்ப
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள் – சிறிதளவு.
செய்முறை: கடலைப்பருப்பை ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு வறுக்கவும். வாசனை வரும் வரை வறுத்த பின் இறக்கி ஆறவைத்து, ஒரு கப் பால் விட்டு நன்கு கரைக்கவும். அடுப்பில் வைத்து மீதி பாலை ஊற்றி நன்கு கொதித்ததும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். முந்திரி, திராட்சையை வறுத்து அதில் போடவும். ஏலக்காய் தூள் சேர்த்து லேசாக பச்சை கற்பூரத்தை தூவி வந்தால் கூடுதல் மணம் வரும். வடிந்ததும் தேங்காய்ப்பால் சேர்த்துக் கிளறவும்.