சென்னை: ஆரோக்கியத்தை அளிக்கும் பலாக்கொட்டையில் வடை செய்வது பார்த்து இருக்கிறீர்களா. அதை எப்படி செய்வது என்று பார்ப்போம் வாங்க.
தேவையானவை :
பலாக்கொட்டை – அரை கப்கடலைப்பருப்பு – ஒரு கப்உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்பவெங்காயம் – ஒன்று நறுக்கியதுமிளகு பொடி – ஒரு ஸ்பூன்பெருங்காயப்பொடி – ஒரு சிட்டிகை
செய்முறை: கடலைப் பருப்பை ஊறவைத்து அரைக்கவும். பலாக் கொட்டைகளை வேக வைத்து தோல் நீக்கி மசிக்கவும். இரண்டையும் கலந்து உப்பு, பெருங்காயப் பொடி, மிளகு பொடி சேர்த்து பிசையவும்.
மாவை வடைகளாக தட்டி காய்ந்த எண்ணையில் பொரிக்கவும். கரகர மொறு மொறு பலாக்கொட்டை வடை தயார்.