பூண்டு மிளகு குழம்பு என்பது சுவையிலும், உடல்நலத்திலும் சிறந்த ஒரு பாரம்பரிய உணவு. இதை பாட்டி கைப்பக்குவத்தில் செய்வது என்றால் அந்த சுவை கூடுதல் விசேஷம் தான். இந்த குழம்பு செய்ய தேவையான முக்கியமான பொருட்கள்: பூண்டு, வெங்காயம், மிளகு, மல்லி, காய்ந்த மிளகாய், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங்காயம், கருவேப்பிலை, சீரகம், கடுகு, உளுத்தம் பருப்பு, புளி, நல்லெண்ணெய் ஆகியவையாகும்.

முதலில் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கி, பின்னர் தக்காளி சேர்க்க வேண்டும். இதே நேரத்தில் மற்றொரு கடாயில் மிளகு, சீரகம், மல்லி, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும்.
வறுத்தவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். அதை வெங்காய தக்காளி கலவையில் சேர்த்து, மஞ்சள் தூள், பெருங்காயம், சாம்பார் பொடி சேர்த்து கிளறவும். பின்பு புளி கரைசலைச் சேர்க்கவும். கொதிக்கவிட்ட பிறகு குழம்பு மாறி கெட்டி பதம் அடைந்ததும் அடுப்பை அணைத்துவிடலாம்.
இந்த பூண்டு மிளகு குழம்பு சுவைக்கும், நலனுக்கும் நம்மை ஈர்க்கும் உணவாகும். இது பரோட்டா, சாதம், இடியாப்பம் போன்றவற்றுடன் நன்கு ஒத்துவரும். வயிறு பெருமளவில் நிம்மதியாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடக் கூடியது. இது காய்ச்சல், இருமல் போன்றவை வராமல் தடுக்கும். இதில் உள்ள பூண்டின் மருத்துவ குணங்கள் மிகுந்த நன்மைகளை தரும். மிளகின் காரசாரம் மற்றும் பூண்டின் நறுமணம் உணவை ரசிக்க வைக்கும்.இந்த பாரம்பரிய உணவு செய்முறை தெரிந்தால் வீட்டிலேயே சுவையான உணவை தயார் செய்து குடும்பத்தினரைக் கவரலாம்.