தேவையான பொருட்கள்:
அரிசி – 1 கப்
பெரிய உருளைக்கிழங்கு – 1 (உரித்து நறுக்கியது)
வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 1/4 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
எண்ணெய் – 1 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
கசூரி மேத்தி – சிறிது
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
முதலில் அரிசியை தயார் செய்யவும். பிறகு உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு தனியாக வைக்கவும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கிளறவும்.
அடுத்து சிறிது உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி உருளைக்கிழங்கை வேக வைக்கவும். உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும் சாதம் சேர்த்து நன்கு கிளறி ஒரு நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி, கசூரி மேத்தி தூவி நெய் ஊற்றி கிளறி இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு ரெடி.