தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1 1/2 கிலோ
புதினா – 1 கப்
கொத்தமல்லி – 1 கப்
பச்சை மிளகாய் – 4
எண்ணெய் – 1 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4 (நறுக்கியது)
தயிர் – 200 கிராம்
மிளகுத் தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
சீரகத் தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
வெள்ளை மிளகுத் தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1 டேபிள் ஸ்பூன்
பிரஷ் க்ரீம் – 150 மிலி
கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்சர் ஜாரில் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது நீரை தெளித்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் எண்ணெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு சூடானதும், அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும். அடுத்து அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு 4-5 நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க வேண்டும். பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து கிளறி விட வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும். பின் தயிரை சேர்த்து 3 நிமிடம் கிளறி விட வேண்டும். பின்னர் மிளகுத் தூள், சீரகத் தூள், வெள்ளை மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும். அடுத்து பிரஷ் க்ரீம்மை சேர்த்து கிளறி மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து, மூடியைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான க்ரீன் சிக்கன் கிரேவி தயார்.