சென்னை: கிரில்ட் இறால் செய்து பாருங்கள். அருமையான ருசியில் இருக்கும். ஒருமுறை செய்து கொடுத்தால் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று கேட்பார்கள் உங்கள் குடும்பத்தினர்.
தேவையான பொருட்கள்
இறால் – 500 கிராம்
பூண்டு – 4-5 பெரியது
எலுமிச்சை சாறு – 3 மேசைக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
அரைத்த மிளகு – 1 தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி இலை – 2 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை: கொத்தமல்லி இலையை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இறால், நசுக்கிய பூண்டு, எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், அரைத்த மிளகு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
கிரில்லை சூடாக்கி அனைத்து இறால்களையும் ஒரே லேயராக பெரிய ஆவன்-ப்ரூப் பாத்திரத்தில் வைக்கவும். பாத்திரத்தை கிரில்லின் கீழ் வைக்கவும். இறாலின் ஒரு புறத்தை 2-3 நிமிடங்கள் கிரில் செய்யவும்.
பாத்திரத்தை வெளியே எடுத்து, இறால்களைத் திருப்பவும். மறு புறமும் 2-3 நிமிடங்கள் கிரில் செய்யவும். பின் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான கிரில்டு இறால் ரெடி. உங்கள் குடும்பத்தினர் விரும்பி சாப்பிடுவார்கள்.