சென்னை: சோயா பீன்ஸ் பெரும்பாலும் பலருக்கும் பிடித்த ஒன்று தான். இந்த சோயா பீன்ஸை வைத்து அடை செய்வது எப்படி என்பது தெரியுமா அல்லது இதற்கு முன்பு நீங்கள் சோயா பீன்ஸ் அடை செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? இல்லை என்றால் எப்படி சோயா பீன்ஸ் அடை செய்வது என்பது குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையானவை
இட்லி அரிசி
கடலைப் பருப்பு
துவரம் பருப்பு
சோயா பீன்ஸ்
பாசிப்பருப்பு
காய்ந்த மிளகாய்
மஞ்சள்தூள்
தேங்காய் துருவல்
பெருங்காயத்தூள்
எண்ணெய்
உப்பு
கருவேப்பிலை
செய்முறை: முதலில் அரிசி, பருப்புகள் மற்றும் சோயா பீன்ஸ் ஆகியவற்றை நன்றாக கழுவி, மூன்று மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.
பின் ஊற வைத்துள்ளவற்றை நன்றாகக் கழுவி தண்ணீரை வடிகட்டி, அதனுடன் காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள மாவுடன் சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலக்கி சிறிது நேரம் அப்படியே வைத்து விடவும்.
தோசை கல்லை காய வைத்து அரைத்து வைத்துள்ள மாவை சிறிய சிறிய அடைகளாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அவ்வளவு தான் அட்டகாசமான சோயா பீன்ஸ் அடை தயார்.