நகரம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கடையும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தனித்துவமான சுவையை வழங்குகிறது. சிலர் தங்கள் உணவுகளில் கவர்ச்சிகரமான வண்ணங்களைப் பயன்படுத்துகின்றனர். மற்றவர்களோ ஆரோக்கியமற்ற அளவு உப்பைப் பயன்படுத்துகின்றனர். எவ்வளவுதான் உணவுகள் நன்றாக இருந்தாலும், நாளடைவில் அது நம் உடல்நலத்தைப் பாதிக்கவே செய்கிறது. எனவே, உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் சேர்க்கப்படாத உண்மையான சிக்கன் கெபாப்களை நீங்கள் சாப்பிட விரும்பினால், சுரேஷின் செய்முறையைப் பின்பற்றலாம்.
சுரேஷ் செய்முறையின் படி, சிக்கன் கெபாப் தயாரிக்க தேவையான பொருட்கள் என்னவென்றால் பச்சை மிளகாய், சோள மாவு, தந்தூரி தூள், புதினா, கொத்தமல்லி, இரண்டு முட்டை, கசூரி மெத்தி, இஞ்சி மற்றும் பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சை மற்றும் மிளகு தூள். இவை அனைத்தையும் சிக்கன் துண்டுகளுடன் நன்றாக கலந்து சிறிது நேரம் ஊற வைக்கிறார். பின்னர் அதை எண்ணெயில் வறுத்து இந்த சூப்பர் டேஸ்டி சிக்கன் கெபாப்களை தயாரிக்கிறார். சிக்கன் கெபாப் மென்மையாகவும் ஜுஸியாகவும் இருக்க வேண்டுமென்றால், துல்லியமான அளவீடுகளைப் பின்பற்றுவது முக்கியம் என சுரேஷ் கூறுகிறார்.
செய்முறை :
ஒரு கிலோ சிக்கனை, கெபாப்களுக்கு ஏற்றவாறு சிறிய துண்டுகளாக வெட்டவும். அதை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்யவும்.
சுத்தம் செய்த பிறகு, சரியான அளவு பச்சை மிளகாய், சோள மாவு, தந்தூரி சிக்கன் மசாலா, புதினா, கொத்தமல்லி, முட்டை, இஞ்சி மற்றும் பூண்டு விழுது, மிளகு தூள், எலுமிச்சை, உப்பு மற்றும் கசூரி மேத்தி ஆகியவற்றை சிக்கனில் சேர்க்கவும். குறைந்தப்பட்சம் ஒரு மணி நேரம் இதை ஊற வைக்க வேண்டும். அப்போதுதான் உப்பு மற்றும் மசாலா ஆகியவை இறைச்சியில் நன்றாக இறங்கும்.
இப்போது கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின்னர் அழகான சிவப்பு நிறம் வரும் வரை சிக்கனை வறுக்கவும்
அவ்வளவுதான். இப்போது எண்ணெயில் இருந்து சிக்கனை எடுக்கவும். இப்படிச் செய்தால் சிக்கன் கெபாப் ஆரோக்கியமானதாகவும் சுவையானதாகவும் இருக்கும்.