சென்னை: அருமையான சுவையில் மாம்பழ புளிசேரி தயாரிப்பது எப்படி என்ற தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
தேவையானவை:
மாங்காய்த் துண்டுகள் – ஒரு கப்
பழுத்த மாம்பழம் – 5 (தோல், கொட்டை நீக்கி துண்டுகளாக்கவும்)
பச்சை மிளகாய் – 8
தேங்காய்த் துருவல் – முக்கால் கப்
மோர் – ஒரு கப்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை: தேங்காய்த் துருவலுடன் பச்சை மிளகாய், மாம்பழத் துண்டுகள், மோர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாணலியில் மாங்காய்த் துண்டுகள், மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர்விட்டு வேகவிடவும்.
மாங்காய் நன்கு வெந்த பிறகு மிளகுத்தூள், அரைத்த விழுது சேர்த்து, கொதிக்க ஆரம்பிக்கும் போதே இறக்கவும் (கொதிக்க வைக்கக் கூடாது). சிறிதளவு எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்துச் சேர்க்கவும். அருமையான சுவையில் மாம்பழ புளிச்சேரி தயார். இதை சாதத்துடன் பரிமாறவும்.